Random image

உலகக் கோப்பை கால்பந்து 2018 : இறுதிச் சுற்றில் நுழைந்த குரோஷியா

மாஸ்கோ

லகக் கோப்பை கால்பந்து 2018 அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2-1 எனற கோல் கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்குள் முதன் முறையாக குரோஷியா நுழைந்துள்ளது.

 

நேற்று உலகக் கோப்பை கால்பந்து 2018 போட்டிகளின் அரை இறுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது.   மாஸ்கோவின் லுஸ்னிகி ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியும் குரோஷியா அணியும் மோதின.  இந்த போட்டியில்  இரு அணிகளும் அபாரமாக விளையாடின.  அதிலும் குரோஷியாவின் வீரர்கள் மாண்ட்ஸுகிக் மற்றும் பெரிசிக் ஆட்டம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

அதே நேரத்தில் இங்கிலாந்து அணியும் சளைக்காமல் ஆடின.   ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சம அளவில் இருந்தன.  அதனால்  கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது.   அந்த நேரம் முடிவதற்குள் குரோஷியா அணியின் மாண்ட்ஸுகிக் தனது அணியின் அடுத்த கோலை அடித்தார்.

குரோஷியா அணி இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.   குரோஷியா அணி இறுதிச் சுற்றுக்கு வருவது இதுவே முதன் முறையாகும்.   அத்துடன் முதலில் பின்னணியில் இருந்த குரோஷியா நாக் அவுட் போட்டிகளில் இருந்தே அபாரமாக விளையாடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கதாகும்.