ஃபிஃபா 2018: டென்மார்க் – பிரான்ஸ் போட்டி டிரா

மாஸ்கோ:

உலகக்கோப்பை கால்பந்து ஃபிஃபா 2018 போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகிறது. இன்று நடந்த ஒரு லீக் போட்டியில் டென்மார்க், பிரான்ஸ் அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே 2 அணி வீரர்களும் கோல் போட முயற்சித்தனர். ஆனால் அது தோல்வியிலேயே முடிந்தது. முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதியில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் போட்டி டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.