உலகக் கோப்பை கால்பந்து 2018 : ஸ்வீடனை ஜெர்மனி வீழ்த்தியது

மாஸ்கோ

லகக் கோப்பை கால்பந்து 2018 போட்டியின் லீக் ஆட்டத்தில் ஜெர்மனி ஸ்வீடனை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது..

நேற்று நடந்த உலகக் கோப்பை கால்பந்து 2018 போட்டியின் லீக் ஆட்டத்தில் ஜெர்மனியும் ஸ்வீடனும் மோதின.    ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்வீடனின் ஆதிக்கம்  இருந்தது.     இரு அணிகளும் கோல் போட கடுமையாக முயன்றன.   ஆட்டம் தொடங்கி 32 ஆவது நிமிடத்தில் ஸ்வீடன் அணியின் டோனி குரூஸ் தனது முதல் கோலை அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

அதை சமன் செய்ய மிகவும் முயன்ற ஜெர்மனி அணி தனது முதல் கோலை அணியின் வீரர் ரியூஸ் மூலம் 48 ஆவது நிமிடத்தில் அடித்தது.    அப்போது இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சம விகிதத்தில் இருந்தது.     வெற்றி பெற வேண்டி ஜெர்மனியும் ஸ்வீடனும் கடுமையாக போராடியது.

கடைசி நேரத்தில் ஜெர்மனியின் வீரர்கள் ரியூஸ், மற்றும் ஆல்சன் முயற்சியால் ஜெர்மனி அணி   தனது 2 ஆவது கோலை அடித்தது.

அதை ஒட்டி ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

போட்டியின் 25 ஆவது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் செபாஸ்டியன் ரூடிக்கு மூக்கில் அடிபட்டு ரத்தம் கொட்டியது.   இதனால் இவர் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: FIFA 2018 : Germany defeated Sweeden
-=-