ஃபிஃபா 2018; நாக் அவுட் சுற்றுக்கு ஜப்பான் தகுதி

மாஸ்கோ:

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ஃபிஃபா 2018 ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. ‘ஹெச்’ பிரிவில் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்யும் கடைசி லீக் போட்டி இன்று நடந்தது.

இதில் ஒரு ஆட்டத்தில் ஜப்பான்,- போலந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் போலந்து 1&-0 என கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த பிரிவில் இடம்பிடித்துள்ள கொலம்பியா,- செனகல் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கொலம்பியா 1&-0 என வெற்றி பெற்றது.

இதனால் ஜப்பான், செனகல் அணிகள் ஒரு வெற்றி, ஒரு டிரா மூலம் தலா 4 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தது. இதனால் எந்த அணி அதிக கோல் அடித்தது என்று பார்க்கப்பட்டது.  2 அணிகளுமே 4 கோல் அடித்து சம நிலையில் இருந்தது. எந்த அணி அதிக கோல் வாங்கியது என பார்த்தபோது 2 அணிகளும் தலா 4 கோல்கள் வாங்கியிருந்தன.

இதனால் கோல் அடிப்படையிலும் 2 அணிகள் சமநிலை பெற்றிருந்தன. அதனால் ஒழுங்கு நடவடிக்கையில் யார் சிறந்த அணி என்பது பார்க்கப்பட்டது. இதில் செனகலுக்கு பின்னடைவு ஏற்பட்டது. செனகல் 6 மஞ்சள் கார்டு பெற்றிருந்தது. ஆனால் ஜப்பான் 4 மஞ்சள் கார்டுதான் பெற்றிருந்தது. இதனால் ஜப்பான் நாக்அவுட் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டது.

You may have missed