ஃபிஃபா 2018: தென் கொரியாவை வீழ்த்தி மெக்சிகோ அபாரம்

மாஸ்கோ:

உலககோப்பை கால்பந்து போட்டி ஃபிஃபா 2018 ரஷ்யாவில் நடந்து வருகிறது. இன்று நடந்த ஒரு போட்டியில் மெக்சிகோ அணியும், தென்கொரிய அணியும் மோதின.

போட்டி தொடங்கிய 26-வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் கார்லோஸ் வெலா ஒரு கோல் அடித்தார். 66-வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஜாவியெர் ஹெர்னாண்டஷ் மெக்சிகோ ஒரு கோல் அடித்தார். மெக்சிகோ அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது.

தென்கொரிய அணி கூடுதல் நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. இறுதியில் மெக்சிகோ அணி 2-&1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-வது சுற்றுக்கு மெக்சிகோ தகுதி பெற்றது.

You may have missed