ஃபிஃபா 2018: ஐஸ்லாந்தை வீழ்த்தியது நைஜீரியா….அர்ஜெண்டினா மகிழ்ச்சி

மாஸ்கோ:

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ஃபிஃபா 2018 ரஷ்யாவில் நடந்து வருகிறது. இதில் இன்றைக்கு நடந்த ஒரு ஆட்டத்தில்- நைஜீரியா அணியும், ஐஸ்லாந்து அணியும் மோதின.

இதில் 2:-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை நைஜீரியா அணி வென்றது. நைஜீரியா வீரர் அகமது முசா 49வது நிமிடத்திலும், 75வது நிமிடத்திலும் என 2 கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இந்த போட்டியில் ஐஸ்லாந்து தோல்லை அடைந்ததன் மூலம் நேற்றையை போட்டியில் தோல்வி அடைந்த அர்ஜெண்டினா உலககோப்பை போட்டியில் தொடரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் அர்ஜெண்டினா அணியினரும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.