உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு: சோனி தகவல்

டில்லி:

ஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா உலககோப்பை போட்டிக்கு இந்திய பெண்களிடையே ஆதரவு பெருகி இருப்பதாக சோனி நிறுவனம் நடத்திய ஆய்வுகள் தெரிவித்து உள்ளன.

இதுவரை கிரிக்கெட் போட்டிகள்  மட்டுமே இந்திய பெண்களிடம்  பெருமளவு வரவேற்பு பெற்றிருந்த நிலையில், தற்போது கால்பந்து போட்டிக்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த, பிபா உலக கோப்பை போட்டிகளை ஒளிபரப்பி வரும் சோனி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

21வது பிபா  உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று முதல் நாக்அவுட் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகளை சோனி நெட்வொர்க் ஒளிபரப்பி வருகிறது. இந்தியாவில் இந்த நிறுவனம் சார்பில்  இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், வங்காளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் உலகக் கோப்பை போட்டி ஒளிபரப்பப்பட்டன. இதனால் பார்வையாளர் எண்ணிக்கை வழக்கத்தை விட 46 சதவீதம் அதிகரித்திருப்பதாக சோனி நிறுவனம் கூறி உள்ளது.

இந்தியாவில் உலககோப்பை கால்பந்து போட்டியை வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம், கேரளம், மகாராஷ் டிரா,  போன்ற மாநில மக்கள் அதிக அளவில் கண்டுகளித்து வருவதாகவும், இந்தியாவில் மொத்தம் 1 கோடி பார்வையாளர்கள்  பார்த்துள்ளதாகவும், இவர்களில் 50 சதவிகிதம்பேர் பெண்கள் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த தகவலை  சோனி தொலைக்காட்சி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி