உலகக் கோப்பை கால்பந்து 2018 : மொரொக்கோவை வெளியே அனுப்பிய போர்ச்சுகல்

 

மாஸ்கோ

லகக் கோப்பை கால்பந்து போட்டி 2018 லீக் போட்டியில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ அடித்த கோல் மூலம் வெற்றி பெற்று மொரோக்கா அணியை வெளியே அனுப்பி உள்ளது.

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் இன்று நடந்த லீக் ஆட்டட்தில் போர்ச்சுகள் அணியும் மொராக்கோ அணியும் மோதின.  ஆரம்பத்தில் இருந்தே போர்ச்சுகல் அணியின் வீரர் ரோனால்டின் விளையட்டு ரசிகர்களை மிகவும் கவர்ந்து இழுத்தது.   ஏற்கனவே ஸ்பெயின் உடனான போட்டியில் இவர் அடித்த ஹாட் டிரிக் ரொனால்டின் மீது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

இந்த ஆட்டம் மொராக்கோவுக்கு போட்டிகளில் தொடர கடைசி ஆட்டமாக இருந்ததால் போர்ச்சுகல் அணிக்கு கோல் அடிப்பது ஆரம்ப முதலே ஒரு சவாலாகவே இருந்தது.  அதே நேரத்தில் மொரோக்கோ அணியையும் கோல் அடிக்க விடாமல் போர்ச்சுகல் அணி தடுத்து சாதுரியமாக விளையடியது.    போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்ட் ஒரு கோல் அடித்தார்.

மொராக்கோ அணி அதை சமன் செய்ய கடைசி நிமிடம் வரை எவ்வளவோ முயன்றும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.  இந்தப் போட்டியில் தோற்றால் போட்டியை விட்டு விலக வேண்டிய நிலையில் மொரோக்காகோ  உள்ளதால் விடா முயற்சி எடுத்தும் தோல்வியை சந்தித்துள்ளது.   அதை அடுத்து இந்தப் போட்டியில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.   மொரோக்கோ அணி இத்துடன் போட்டியை விட்டு வெளியேற உள்ளது