ஃபிஃபா 2018: ஸ்பெயின் அணியை வீழ்த்தி ரஷ்யா கால் இறுதிக்கு தகுதி

மாஸ்கோ:

உலக கோப்பை கால்பந்து ஃபிஃபா 2018 போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகிறது. இன்று நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணியும், ரஷ்யா அணியும் மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் அபாரமாக விளையாடினர். ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் செர்கய் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.


இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் ரஷ்யா வீரர் ஏரியம் டியுபா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதிய்ல் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன. கூடுதலாக வழங்கப்பட்ட முதல் 15 நிமிடங்களில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்காததால் மறுபடியும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அப்பொழுது மழை பெய்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியாக, பெனால்டி ஷூட் முறை நடத்தப்பட்டது. முதலில் ஸ்பெயின் ஒரு கோல் அடித்தது. அதற்கு பதிலடியாக ரஷ்யாவும் ஒரு கோல் அடித்தது. மறுபடியும் ஸ்பெயின் ஒரு கோல் அடிக்க 2-1 என ஆனது. ரஷ்யா மறுபடியும் கோல் அடிக்க 2-2 என சமனானது.

அடுத்த வாய்ப்பை ஸ்பெயின் அடித்த கோலை கோல் கீப்பர் தடுத்தார். ரஷ்யா தனது அடுத்த வாய்ப்பை கோல் அடித்ததால் 2-3 என்ற கணக்கில் முன்னேறியது. ஸ்பெயின் ஒரு கோல் அடிக்க 3-3 என சமனானது. அடுத்து கோல் போட்டதால் ரஷ்யா 3-4 என முன்னேறியது. இறுதியாக ஸ்பெயின் கோல் தடுக்கப்பட்டதால் 4-3 என்ற கணக்கில் ரஷ்யா வென்று கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியில் ரஷ்யா அணியின் கோல் கீப்பரும், கேப்டனும் தலா ஒரு கோலை தடுத்தனர். இது தான் ரஷ்யாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.