உலகக் கோப்பை கால்பந்து 2018 : ஜெர்மனியை விரட்டி அடித்த தென் கொரியா

மாஸ்கோ

லகக் கோப்பை கால்பந்து 2018 போட்டிகளில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணியை தென் கொரியா வெற்றி பெற்று போட்டிகளை விட்டு விரட்டி உள்ளது.

இன்று உலகக் கோப்பை கால்பந்து 2018 போட்டிகளில் இன்று நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணியுடன் தென் கொரிய அணி மோதியது.   மிகவும் விறுவிறுப்புடன் தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை.   அதனால் இரண்டாம் பாதி தொடங்கியதில் இருந்தே இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றன.

ஆட்டம் தொடங்கி 92 ஆவது நிமிடத்தில் தென் கொரியாவின் கிம் யங் கோன் அணியின் முதலாவது கோலை அடித்தார்.   ரசிகர்களின் உற்சாகக் கூச்சல் விண்ணை எட்டியது.   ஜெர்மனி அணி மிகவும் முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை.

தென் கொரியா தனது அடுத்த கோலை மேலும் நான்கு நிமிடக்ங்கள் கழித்த் அடித்தது.   ஜெர்மனியின் வீரர் நியூர் கோல் அடிக்க முற்பட்ட சமயத்தில் அதை தடுத்த தென் கொரியாவின் ஜு அதை தங்கள் அணியின் கோலாக மாற்றினார்.  அதன் பிறகு ஜெர்மனி முயன்றும் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.

தென் கொரியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.    நடப்பு சாம்பியன் ஜெர்மனி இத்துடன்  போட்டியை விட்டு வெளியேறுகிறது.