உலகக் கோப்பை கால்பந்து 2018 : இன்று ஸ்பெயின் – போர்ச்சுகல் அணி மோதல்

சோச்சி, ரஷ்யா

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் அணி மோதுகின்றன

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கியது.   முதல் நாள் போட்டியில் ரஷ்யாவுடன் சௌதி அரேபியா மோதியது.   மாஸ்கோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ரஷ்யா சௌதி அரேபியாவை 5-0 என்னும் கோல் கணக்கில் தோற்கடித்தது.

இன்று இரண்டாம் நாள் போட்டி சோச்சி என்னும் இடத்தில் நடைபெறுகிறது.   இந்தப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோத உள்ளன.

போர்ச்சுகல் அணி இதுவரை ஆறு முறை உலகக் கோப்பை போட்டிகளில் கலந்துக் கொண்டுள்ளது.  கடந்த 1966ஆம் ஆண்டு மூன்றாம் இடத்தையும் 2006ல் நான்காம் இடத்தையும் பிடித்தது.

ஸ்பெயின் அணி 2010ஆன் ஆண்டின் சாம்பியன் ஆன போதிலும் 2014 ஆம் ஆண்டு போட்டிகளில் தகுதிச் சுற்றிலேயே வெளியேறியது.   தற்போது மீண்டும் இந்த முறை தகுதிச்சுற்றில் வென்று போட்டிக்கு வந்துள்ளது.

இன்றைய போட்டி இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது.