உலகக் கோப்பை கால்பந்து 2018 : பனாமாவை வென்ற டுனிசியா

மாஸ்கோ

லகக் கோப்பை கால்பந்து 2018 போட்டிகளில் டுனிசிய அணி பனாமாவை 2-1 என்னும் கோல் கணக்கில் வென்றது.

உலகக் கோப்பை கால்பந்து 2018ல் நேற்று நடந்த போட்டியில் டுனிசியா அணியும் பனாமா அணியும் மோதின.   துவக்கத்தில் இருந்தே இரு அணிகளும் விருவிருப்பாக போட்டியில் இறங்கினாலும்,  எந்த அணியும் கொல் அடிக்கவில்லை.    போட்டியின் 33 ஆவது நிமிடத்தில் பனாமா அணியின் ரோட்ரிக்யூஸ் முதல் கோலை அடித்தார்.

அதன் பிறகு ஆட்டம் மேலும் விறுவிறுப்படைந்தது.   முதல் பாதி முடிவில் பனாமா ஒரு கோலுடன் டுனிசியா கோல் அடிக்காமலும் இருந்தன.   பரபரப்புடன் நடந்த 2ஆம் பாதி போட்டியில் ஆட்டத்தின் 50ஆவது டுனிசியாவின் பென் யூசுஃப் ஒரு கோல் அடித்து பனாமாவுடன் சமன் செய்தார்.

அதன் பிறகு இரு அணிகளும் வெற்றியை நோக்கி கடுமையாக விளையாடின.   ஆட்டத்தின் 65ஆம் நிமிடத்தில் டுனிசியாவின் காஸ்ரி கோல் அடித்து டுனிசியாவுக்கு இரண்டாம் கோலை சேர்த்தார்.   அதை சமன் செய்ய பனாமா அணி கடுமையாக முயன்றும் முடியவில்லை.   எனவே டுனிசிய அணி வெற்றி பெற்றாதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம் 9 பாயிண்டுகளுடனும், இங்கிலாந்து 6 பாயிண்டுகளுடனும் டுனிசியா 3 பாயிண்டுகளுடனும் உள்ளன.   பனாமாவுக்கு பாயிண்ட் எதுவும் இல்லை.