ஃபிஃபா 2018: ரஷ்யாவை வீழ்த்தி உருகுவே அபாரம்

மாஸ்கோ:

உலககோப்பை கால்பந்து போட்டிகள் ஃபிஃபா 2018 ரஷ்யாவில் நடந்து வருகிறது. இன்று சமாரா மைதானத்தில் குரூப் – ஏ பிரிவின் கடைசி லீக் போட்டி நடந்தது.

இதில் ரஷ்யா அணியும், உருகுவே அணியும் மோதின. முதல் பாதியின் ஆரம்பத்திலேயே ஆதிக்கம் செலுத்திய உருகுவே 10வது நிமிடத்தில் சுராஜ் முதல் கோல் அடித்தார். பின் 23வது நிமிடத்தில் உருகுவே வீரர் செர்ரிசூவ் ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதியின் முடிவில் உருகுவே அணி 2-&0 என முன்னிலை வகித்தது.

பின்னர் தொடங்கிய 2வது பாதியிலும் உருகுவே வீரர் சவானி 90வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தார். ரஷ்ய அணி வீரர்கள் கடைசி வரை ஒரு கோல் கூடி அடிக்கவில்லை. இறுதியில் உருகுவே அணி 3-&0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று குரூப் -ஏ பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளது.