உலகக் கோப்பை கால்பந்து 2018 : போர்ச்சுகலை வெளியேற்றிய உருகுவே

மாஸ்கோ

லகக் கோப்பை 2018 கால்பந்து போட்டியில் உருகுவே அணி வெற்றி பெற்று போர்ச்சுகலை போட்டிகளை விட்டு வெளியேற வைத்துள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து 2018 போட்டியில் நேற்று நடந்த நாக் அவுட் சுற்றில் போர்ச்சுகலும் உருகுவேவும் மோதின.   அணிகள் இரண்டுமே முதல் பகுதியில் மிக தீவிரமாக விளையாடின.   போட்டி ஆரம்பித்த 7 ஆம் நிமிடத்தில் எடின்சன் கவானி தனது கோல் மூலம் உருகுவே அணிக்கு முதல் கோலை அளித்தார்.    அதன் பிறகு போர்ச்சுகல் அணி ஆவேசமாக முயன்றும் முதல் பாதியில் கோல் அடிக்கவில்லை.

இரண்டாம் பாதியில் அதாவது போட்டியின் 55ஆம் நிமிடத்தில் போர்ச்சுகல்    அணியின் முதல் கோலை அந்த அணியின் வீரரான பீப் மற்றொரு வீரர் ரஃபெல் உதவியுடன் அடித்தார்.   இரு அணிகளும் சமமான கோல் கணக்கில் இருந்ததால் ஆட்டம் மேலும் விறுவிறுப்படைந்தது.

ஆட்டத்தின் 62 ஆவது நிமிடத்தில் உருகுவே அணியின் எடின்சன் கவானி தனது இரண்டாம் கோலை அடித்து தமது அணியை 2-1 என முன்னிலைக்கு கொண்டு வந்தார்.    அதன் பிறகு போர்ச்சுகல் எவ்வளவோ முயன்றும் கோல் ஏதும் போட முடியவில்லை.

உருகுவே அணி போர்ச்சுகல் அணியை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

போர்ச்சுகல் அணி போட்டிகளை விட்டு வெளியேறுகிறது.

இந்த வெற்றி மூலம் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ள உருகுவே அணி பிரான்ஸ் அணியுடன் கால் இறுதியில் மோத உள்ளது.