ஃபிபா 2018: எகிப்தை வீழ்த்தி உருகுவே வெற்றி

மாஸ்கோ:

ரஷ்யாவில் உலக கோப்பைக்கான கால்பந்து போட்டி ஃபிபா 2018 நடந்து வருகிறது.\

2ம் நாளான இன்று நடந்த ஒரு போட்டியில் உருகுவே அணியும், எகிப்த் அணியும் மோதின. எக்டேரின்பர் அரினாவில் நடந்த இந்த போட்டியில் 1:0 என்ற கணக்கில் உருகுவே வெற்றி பெற்றது.

உருகுவே அணி வீரர் ஜிமனெஸ் 88வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.