உலகக்கோப்பை கால்பந்து: இன்று நடைபெற உள்ள முதலாவது ஆட்டத்தில் ரஷ்யா- சவூதி அரேபியா அணிகள் மோதல்

மாஸ்கோ:

ஷியாவில் இன்று தொடங்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், முதல் ஆட்டத்தில் ரஷியாவுடன் சவூதி அரேபியா மோதுகிறது.

உலகக் கோப்பைத் தொடரின் தர வரிசையில் 66வது இடத்தில் உள்ள  ரஷிய அணியும்,  63வது இடத்தில் உள்ள  உள்ள சவுதி அரேபியா அணியும் இன்றைய  முதல் ஆட்டத்தில் சந்திக்கிறது. தர வரிசையில் கடைசியில் உள்ள இந்த இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் மோதுவது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டம், இந்திய நேரப்படி  இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த ஆண்டு முதல்,  ஒவ்வொரு போட்டிகளுக்கும் மூன்று கண்காணிப்பாளர்களை சம்மேளனம் நியமித்துள்ளது. அதுபோல முதல்முறையாக உதவி நடுவர் முறையும்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் ஆடுகின்றன. ஆனால், அடுத்த 2022ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின்போது, புதிதாக 16 அணிகள் இணைக்கப்பட்டு,  48 அணிகள் விளை யாட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.