ஃபிஃபா 2018: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பெரு அணி வெற்றி

மாஸ்கோ:
உலக கோப்பை கால்பந்து ஃபிஃபா 2018 போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகிறது. இந்த நடந்த ஒரு போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், பெரு அணியும் மோதின.

இதில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய அணியை பெரு அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

பெரு வீரர் ஆண்ட்ரே கேரில்லோ முதல் கோலை அடித்தார். இந்த அணியின் பாலோவ் கியூரெரோ 2வது கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.