பிஃபா கால்பந்து போட்டியில் கிடைக்கும் பணத்தை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வழங்கும் இளம் வீரர்

19 வயதுடைய இளம் வீரரான கெய்லின் பப்பே உலக கோப்பை கால்பந்து போட்டியில் கிடைக்கும் மொத்த தொகையையும் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு நன்கொடையாக வழங்கி வருகிறார். உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணிக்காக இளம் வீரரான கெய்லின் பப்பே விளையாடி வருகிறார். கெய்லின் இந்த செயல் பிரான்சில் உள்ள இளைஞர்கள் மற்றும் வீரர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
kylian
பாரிஸ் கால்பந்து போட்டியின் கிளப்பில் இருந்து 2017ம் ஆண்டு மொனாகோவிற்கு 19வயதுடைய இளைஞர் 166 மில்லியனுக்கு விற்கப்பட்டார். அந்த இளைஞர் தற்போது ரஷ்யாவில் நடந்து வரும் கால்பந்து போட்டியில் உள்ள இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாக திகழ்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கால்பந்து போட்டியில் கிடைக்கும் மொத்த தொகையையும் குழந்தைகளின் மருத்துவ செலவிற்கு தரும் கெய்லின் மகத்தான செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

பிரான்சில் உள்ள பிரபல நாளிதழில் வெளியான செய்தி குறிப்பில் ”சர்வதேச போட்டியில் கிடைக்கும் மொத்த தொகையை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வழங்கிய முதல் நட்சத்திர வீரர் கெய்லின் பப்பே மட்டும் தான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கெய்லின் விளையாடும் ஒவ்வொரு போட்டியின் போதும் கிடைக்கும் ரூ.15,36,948 தொகையை குழந்தைகளுக்கு நன்கொடையாக அளித்து வருகிறார். இந்த தொகையை கால்பந்து சங்கம் ”பிரியர்ஸ் டி கார்டீஸ் “ என்ற தொண்டு நிறுவனத்திற்கு அனுப்பிவிடுகிறது. இந்த பணம் குறைபாடு உள்ள குழந்தைகளின் விளையாட்டு நடவடிக்கையை மேம்படுத்த உதவுகிறது. கெய்லின் இத்தகைய செயலை பார்த்த மற்ற வீரர்கள் தாங்களும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவ முன்வந்துள்ளனர்.

“ பணத்தின் மீது அக்கறை கொள்ளமாட்டேன். உலக கோப்பையில் விளையாடுவது போது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஏனெனின் அது ஒரு கனவு. பணம் எப்பொழுது வேண்டுமானாலும். அதற்காக நான் விளையாடவில்லை” என்று கெய்லின் கூறியதாக பிரான்ஸ் அணியின் பாதுகாவலரான சாமுவேல் உம்திதி தெரிவித்தார்.