ஃபிஃபா சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கு தேர்வானார் போலந்தின் லெவன்டோவ்ஸ்கி..!

ஜெனிவா: இந்தாண்டிற்காக ஃபிஃபா சிறந்த கால்பந்து வீரருக்கான விருதுக்கு தேர்வாகியுள்ளார் போலந்து நாட்டின் ராபார்ட் லெவன்டோவ்ஸ்கி. அவர், தற்போது பேயர்ன் முனிக் கிளப் அணிக்காக ஆடி வருகிறார்.

இந்த விருதுக்கான இறுதிப் பட்டியலில், அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி(பார்சிலோனா அணி), போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் போலந்தின் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி ஆகியோர் இடம் பெற்றிருந்தது.

கொரோனா காரணமாக, இந்தமுறை விருக்கு தேர்வுசெய்யப்படும் நிகழ்வானது ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. இதில், இறுதியாக, போலந்து நாட்டு வீரர் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 13 ஆண்டுகளில், மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோவை பின்னுக்குத் தள்ளி, இந்த விருதைப் பெறுகின்ற இரண்டாவது நபராகிறார் இவர்.

இந்த சீசனில் மொத்தமாக தனது பேயர்ன் முனிக் அணிக்காக 55 கோல்களை அடித்து, பல போட்டிகளை வெல்வதற்கு காரணமாக இருந்துள்ளார் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி.