பிஃபா: நாக் அவுட் சுற்றில் ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்க தயாராகும் ஸ்பெயின்

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் நாக் அவுட் சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் அர்ஜெண்டினா மற்றும் போர்ச்சுக்கல் அணிகள் போட்டியை விட்டு வெளியேறின. இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டிகளில் ஸ்பெயின் அணி வீரர்கள் ரஷ்யாவுடன் மோத உள்ளனர். மாஸ்கோவில் உள்ள லூக்னிகி மைதானத்தில் உள்ளூர் நேரப்படி சரியாக 7.30 மணி அளவில் போட்டி தொடங்கப்பட உள்ளது.
Spain
லீக் சுற்றில் ஆறு போட்டிகளில் விளையாடிய ஸ்பெயின் அணி மூன்று போட்டிகளில் வெற்றியும், மூன்று போட்டிகளை டிராவிலும் முடித்துள்ளது. இதேபோல் ரஷ்யா அணி விளையாடிய ஆறு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியை டிராவிலும், மூன்று போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதனை தொடர்ந்து 5 புள்ளிகளுடன் முன்னிலை வகித்த ஸ்பெயின் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

லீக் சுற்றில் ஸ்பெயின் அணியினை சேர்ந்த டிகோ கோஸ்டா, நாச்சோ, இஸ்கோ, இகோ அஸ்பஸ் ஆகியோர் கோல் அடித்தனர். டிகோ கோஸ்டா மூன்று கோல்களை அடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதேபோல் இனியஸ்டா கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தார். இவர்களின் கூட்டணியின் இன்று நடைபெறும் போட்டி ரஷ்யாவிற்கு மிகுந்த நெருக்கடியை கொடுக்கும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
russia
இந்நிலையில் ஸ்பெயின் வீரரான தியாகோ அல்கேண்ட்ரா கூறுகையில், “ இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும், இதுவரை சிறந்த ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தவில்லை. இன்றைய போட்டியில் 11 ரஷ்ய வீரர்களை மட்டும் நாங்கள் எதிர்க்கவில்லை, மைதானத்தில் உள்ள அனைத்து ரஷ்யர்களுக்கு எதிராகவும் விளையாட உள்ளோம்” என்று கூறினார்.

ரஷ்யா அணி லீக் சுற்றின் முதல் போட்டியில் சவுதி அரேபியாவை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிப்பெற்று மிரள வைத்தது. இதனை தொடர்ந்து பலம் வாய்ந்த எகிப்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் ரஷ்யா உருகுவேயிடம் தோல்வியை சந்தித்தது.

ரஷ்யா அணியின் டிபன்டரான செர்ஜி இக்னாஷேவேச் கூறுகையில் “ ஸ்பெயின் அணியினர் கடந்த ஆண்டு விளையாடிய அடே ஆட்டத்தையே இப்போதும் வெளிப்படுத்தி வருகின்றது. அந்த அணியின் டிபர்ண்டர்கள் இடைவெளிவிட்டு விளையாடி வருகின்றனர். இதுவே அவர்களின் பலவீனம் “ என்று கூறியுள்ளார்.

லீக் சுற்றில் ரஷ்யா அணி பெற்ற வெற்றிகளில் டெனிஷ் செடிவேஷ், ஆடெம் சூபா, கொலோவிஸ், கசின்ஸ்கி ஆகிய வீரர்கள் முக்கிய பங்கு வகித்தனர். இதில் செரிவேஷ் மூன்று கோல்களை அடித்து அதிக கோல்கள் அடித்த விரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து உள்ளார்.

ஸ்பெயின் மற்றும் ரஷ்யா அணிகள் இதுவரை 12 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் ஸ்பெயின் 6 ஆட்டங்களிலும், ரஷ்யா 2 ஆட்டங்களிலும், 4 போட்டிகள் டிராவிலும் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.