Random image

பிஃபா உலக கோப்பை: வலியால் துடித்த நெய்மரை தொடரும் விமர்சனங்கள்

உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் நெய்மருக்கு காலில் அடிப்பட்டு கீழே விழுந்ததை விமர்சித்து பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பிரேசிலின் முன்னாள் நட்சத்திர வீரரான ரொனால்டோ அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். நேற்று முன் தினம் நாக் அவுட் சுற்றின் இறுதி போட்டியில் பிரேசில் மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின. இதில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் மெக்சிகோவை பிரேசில் வெற்றிக் கொண்டது.
neymar
இந்த போட்டியின் 71வது நிமிடத்தில் நெய்மரின் கணுக்காலில் மெக்சிகோவின் வீரர் மிக்யூல் மிதித்தார். இதனால் நெய்மர் வலியால் துடித்து மைதானத்தில் பிரண்டார். காயம் ஏற்படாத போது நெய்மர் ஏன் இப்படி செய்கிறார் என்று அனைவரும் முதலில் கருதினர். பின்னர் வெளியிடப்பட்ட வீடியோவில் மெக்சிகோ வீரர் நெய்மரின் காலில் மிதிப்பது பதிவாகியது.

இதனை தொடர்ந்து நெய்மரை மருத்துவக்குழு, வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சூழ்ந்துக் கொண்டனர். இதனால் சில நேரம் போட்டி தாமதப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மெக்சிகோவில் பயிற்சியாளர் கார்லஸ் ஒசோரியா “ நெய்மரின் இந்த நடிப்பால் அதிக நேரம் வீணடிக்கப்பட்டது. அவரின் நடிப்பு கால்பந்து போட்டிக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டது” என்று கூறினார். இதேபோல் அயர்லாந்து பயிற்சியாளர் “ நெய்மர் மிகசிறந்த நடிகர், அவருக்கு ஆஸ்கர் விருது அளிக்கலாம் “ என்று சாடியுள்ளார்.

இந்த விமர்சனங்களை தொடர்ந்து நெய்மருக்கு ஆதரவாக பிரேசிலின் முன்னாள் வீரர் ரொனால்டோ பேசிவருகிறார். அவர் பேசியபோது “ எங்கள் மீதான கருத்துக்கள் தொழில்நுட்பம் நிறைந்ததாக இருக்க வேண்டும், மாறாக ஒரு பாரில் வேட்டைக்காரர்களை போல இல்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் ”அவர் திறமையான வீரர். நானும் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டேன். காயமும் அடைந்தேன். அதேபோல் நெய்மருக்கும் நேர்ந்துள்ளது. அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் முட்டாள்தனமானது. அவர் தேசத்திற்காக பணியாற்றி வருகிறார். அவரின் செயலை பாராட்ட வேண்டும் “ என்று ரொனால்டோ கூறியுள்ளார்.

இது குறித்து நெய்மர் கூறுகையில் “ என்னை தாக்குவதன் மூலம் அணியை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர். விமர்சனங்களையோ, பாராட்டுக்களையோ நான் கவனிப்பதில்லை. அதன் மீது கவனம் செலுத்தினால் எனது விளையாட்டு பாதிக்கப்படும். எனது அணிக்காக நான் விளையாடி வருகிறேன்” என்று தெரிவித்தார்