ஃபிஃபா 2018: செல்ஃப் கோல் மூலம் ஈரானிடம் வீழ்ந்த மொராக்கோ

மாஸ்கோ:

உலககோப்பை கால்பந்து போட்டி ஃபிஃபா 2018 ரஷ்யாவில் நடந்து வருகிறது. இதில் குரூப் பி பிரிவில் இன்று மொராக்கோ அணியும், ஈரான் அணியும் மோதின.

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் மொராக்கோ வீரர் பவுஹடவுஸ் எதிர்பாராதவிதமாக தனது அணிக்கு எதிராக செல்ஃப் கோல் அடித்துவிட்டார். இதனால் மொராக்கோ அணியை ஈரான் 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.