உலகக்கோப்பை கால்பந்து: அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுமா அர்ஜென்டினா, போர்ச்சுகல் அணிகள்?

ரஷ்யாவில் நடைபெறும் பீபா கால்பந்து உலகக்கோப்பையின் நாக் அவுட் சுற்றுகள் இன்று முதல் துவங்க இருக்கின்றன.

உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடந்துவருகிறது.  32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக்கோப்பையின் தகுதிச்சுற்று நிறைவடைந்தது. இதில் வெற்றி பெற்ற 16   அடுத்தச் சுற்றான நாக் அவுட் சுற்றுகளில் போட்டியிட இருக்கின்றன.

 

இன்று நடைபெறும் முதல் நாக்அவுட் சுற்றில், முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோத இருக்கின்றன.

தரவரிசையில் 5 ஆம் இடத்தில் உள்ள அர்ஜென்டினா அணியும் 7வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணியும் சமபலம் வாய்ந்த அணிகள் ஆகும். ஆகவே இந்த  போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.  மெஸ்ஸி ரசிகர்கள், அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று, அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்று மிகவும் ஆவலோடு இருக்கிறார்கள்.

அதேபோல் இன்று நடைபெறும் இரண்டாவது நாக் அவுட் சுற்றில் ‘ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடித்த உருகுவே அணியும், ‘பி’ பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த போர்ச்சுகல் அணியும் மோதுகின்றன.

உருகுவே அணியில் சுவாரஸ், கவானி உள்ளிட்ட வீரர்கள் விளையாட இருப்பதால் அந்த அணி மிகவும் பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  அதேபோல், போர்ச்சுகல் அணியில் ரொனால்டோ மட்டுமே சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

வதால், மற்ற அணி வீரர்களும் நன்றாக விளையாடினால் மட்டுமே அந்த அணி இந்த போட்டியில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ஆக, அடுத்தச் சுற்றுக்கு முன்னேறப்போகும் அணி அர்ஜென்டினாவை, போர்ச்சுகலா என்பது இன்று தெரிந்துவிடும்.

You may have missed