பிஃபா உலக கோப்பை: அரையிறுதி போட்டிகளில் பங்கேற்கும் அணிகள் இதோ…

பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதிகட்டதை நெருங்கிய நிலையில் ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஜூன் 6 மற்றும் 7ம் தேதி நடந்து முடிந்த காலிறுதி சுற்றில் நான்கு அணிகள் வெற்றிப்பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. பிரான்ஸ், பெல்ஜியம், இங்லிலாந்து, குரோஷியா உள்ளிட்ட அணிகள் அரையிறுதியில் அனல்பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளன. எந்தெந்த அணிகள் யாருடன் மோத உள்ளன என்ற பட்டியலை பிஃபா கால்பந்து அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ஜூலை 10 மற்றும் 11ம் தேதிகளில் அரையிறுதி போட்டிகள் நடைபெறுகின்றன.

Semi-finalists

செவ்வாய்கிழமை ஜூலை 10ம் தேதி:

செயிண்ட் பீட்டர்பெர்க்ஸ் மைதானம் ரஷ்யாவில் நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்த்து பெல்ஜியம் அணி பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்த போட்டி உள்ளுர் நேரப்படி சரியாக இரவு 11.30 மணிக்கு தொடங்க உள்ளது.

புதன்கிழமை ஜீலை 11ம் தேதி :

மாஸ்கோவில் உள்ள லூக்னிகி மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் பலமிக்க இங்கிலாந்து அணியுடன் குரோஷியா அணி மோத உள்ளது. இந்த போட்டி சரியாக இரவு 11.30 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.