பிஃபா உலக கோப்பை: பிரேசில் – ஸ்விசர்லாந்து மோதல்

பிஃபா உலக கோப்பையில் பிரேசிலை தோற்கடிப்பது எளிதான ஒன்று இல்லை என ஸ்விசர்லாந்தின் கோல் கீப்பரான சோமர் தெரிவித்துள்ளார். பிஃபா உலக கோப்பையில் ஐந்து முறை பிரேசில் மற்றும் சுவிசர்லாந்து மோதின. இதில் பிரேசில் 9-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
fifa
உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் சாதாரண விதிகள் பொருந்துவதில்லை. ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சில வரலாற்று புள்ளிகளை தக்கவைத்து கொள்ள சுவிசர்லாந்து முயற்சிக்கும். 1950வது ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் சுவிசர்லாந்து பிரேசிலை எதிர்கொண்டது. அப்போது விசாதிமிர் பெட்கோவிக் எந்தவித பயமும் இன்றி காணப்பட்டார். விறுவிறுப்பான ஆட்டத்தின் போது கால்பந்து ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இறுதியாக இருஅணிகளும் 2-2 என்ற புள்ளிகள் பெற்றதால் ஆட்டம் ட்ராவில் முடிந்தன.

68ஆண்டுகள் கடந்த நிலையில் கோல் கீப்பரான யான் சோமர் மீண்டும் வெற்றிப்பெறும் கனவோடு களத்தில் இறங்க உள்ளார். நாங்கள் தயாராக இருக்கிறோம், போட்டியை தொடர்ந்து கவனித்து வருகிறோம், எங்கள் அனைவருக்கும் தன்நம்பிக்கை இருகிறது. ஆனால் பிரேசிலை தோற்கடிப்பது அவ்வளவு எளிதான ஒன்று இல்லை. விளையாட்டில் எங்களது முழுகவனத்தையும் செலுத்த உள்ளோம் என்று சோமர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஒருபுறம் பிரேசில் தங்கள் பங்கிற்கு தயாராகி வருகின்றன. உலக கோப்பை போட்டியின் முதலிலேயே சுவிசர்லாந்தை எதிர்கொள்வது என்பது வலிமையான ஒரு அணியுடம் மோதுவது என்று பிரேசில் அணி கருத்து தெரிவித்துள்ளது. 2014வது ஆண்டு நடைபெற்ற அரையிறுதி போட்டியில் 7-1 என்ற புள்ளிகளில் ஜெர்மனியை எதிர்கொண்டது. இரண்டாவதாக நெதர்லாந்துடன் மோதி மூன்றாவது இடத்தை பெற்று பிரேசில் வெற்றி வாய்ப்பை இழந்தது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய வலியை ஏற்படுத்தியது. பிரேசில் வலதுபுறத்தில் இருந்து தனது அதிரடியான தாக்குதல்களை வெளிப்படுத்தாவிட்டாலும் எச்சரிக்கையுண்ட செயல்படுவது அவசியமாறிகிறது. இந்த ஸ்விசர்லாந்தை எதிர்கொள்வது குறித்து பிரேசில் எந்தவித தகவலையும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளது.

பிரேசில் அணியில் அதிகம் பேசப்படும் நட்சத்திர வீரரான நெய்மர் இடதுபுறத்தில் இருந்து தாக்குவது முன்னெறி செல்வதற்கான அடித்தளம் மற்றும் எதிர்பாராத ஒரு நிகழவாகவும் அமையும். இதனால் எதிரணியான சுவிசர்லாந்து சற்று விழிப்புணர்வுடன் செய்ல்பட வேண்டும். ஆனால் பெட்கோவிக் தனது அணியுடன் சேர்ந்து பிரேசிலை எதிர்கொள்ள புதிய திட்டங்களை வகுத்துள்ளார்.

சுவிசர்லாந்து அணியின் கேப்டன் ஸ்டீபன் லிட்ச்ஸ்டியர், பிரேசில் அணியின் நெய்மருக்கு சவால் அளிக்க உள்ளார். 34வயதான ஸ்டீபன் அனுபவமுள்ள ஒரு கேப்டன். சுவிசர்லாந்து அணியின் வெற்றி கேப்டனை சார்ந்தும் உள்ளது. 2013ம் ஆண்டு இரண்டு அணிகளும் மோதியதை அனைவராலும் மறக்க முடியாத ஒன்று. ஞாயிற்றுக்கிழமை சுவிசர்லாந்து மற்றும் பிரேசில் அணி ஒருவரை ஒருவர் எதிர்கொள்வது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாகும்