பிஃபா உலக கோப்பை: இறுதி போட்டியில் கொலம்பியா – இங்கிலாந்து மோதுமா ?

பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் லீக் சுற்றுகள் முடிவடைந்து நாக் அவுட் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. போட்டியில் எந்த அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறும் என்று பல்வேறு எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்நிலையில் பிபிசி ஊடகத்தின் கால்பந்து போட்டியின் நிபுணரான மார்க் லாரன்சன் கடைசி 16 போட்டிகளின் முடிவை கணித்துள்ளார். ரஷ்யாவில் நடைபெற்ற 48 போட்டிகளில் 22 போட்டிகளின் முடிவுகள் லாரன்ஸ் கணித்தது போன்று இருந்தது.
lawro
உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அணிகளின் பலம் மற்றும் பலவீனங்களை கொண்டு எந்தந்த அணிகள் வெற்றிப்பெறும் என்று லாரன்ஸ் கணித்துள்ளார். நாக் அவுட் சுற்றில் பிரேசில் வெற்றிப்பெறும் என்றும், இங்கிலாந்து அணி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும் என்றும் லாரன்சஸ் கணித்துள்ளார். இறுதி போட்டியில் கொலம்பியா உடன் இங்கிலாந்து மோதும் என்று லாரன்ஸ் கணித்துள்ளார்.

சனிக்கிழமை நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் 2 கோல்கள் எடுத்து அர்ஜெண்டினாவை வெற்றிப்பெறும் என்று லாரசன் கணித்தார். கிட்டத்தட்ட அவர் கணிப்பின்படி 4-3 என்ற கோல் எடுத்து அர்ஜெண்டினாவை பிரான்ஸ் வெற்றிப்பெற்றது.

அதே நாளில் உருகுவே மற்றும் போர்ச்சிக்கள் அணிகள் மோதின. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவே வெற்றிப்பெறும் என்று முன்கூட்டியே லாரன்சன் கூறினார். அவரது கூற்றுப்படி 2-1 என்ற கோல்கள் கணக்கில் போர்ச்சுக்கல்லை உருகுவே வென்றது.

ஜூலை 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள போட்டிகளில் ஸ்பெயின் மற்றும் ரஷ்யாவும், குரோஷியா மற்றும் டென்மார்க் அணிகளும் மோத உள்ளன. இரண்டு போட்டிகளிலும் தலா இரு கோல்கள் எடுத்து ஸ்பியின் மற்றும் குரோஷியா அணிகள் வெற்றிப்பெறும் என்று லாரன்ஸ் கூறியுள்ளார். ‘

இதேபோன்று ஜுலை 2ம் தேதி நடைபெற உள்ள பிரேசில் மற்றும் மெக்சிகோவுடனான போட்டியில் பிரேசில் அணியும், பெல்ஜியம் மற்றும் ஜப்பான் உடனான போட்டியில் பெல்ஜியம் அணியும் வெற்றிப்பெறும் என லாரன்சன் கணித்துள்ளார்.