பிஃபா உலக கோப்பை: பெனால்டி ஷூட் அவுட்டில் ரஷ்யாவை வென்ற குரோஷியா

உலக கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி சுற்றில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் ரஷ்யாவை 4-3 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி குரோஷியா அணி வெற்றிப்பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குரோஷியா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. கால்பந்து போட்டியின் காலிறுதி சுற்று வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதி சுற்றில் கடைசி போட்டியில் ரஷ்யா அணி பலம்வாய்ந்த குரோஷியா அணியுடன் மோதியது.
croatia
இந்த போட்டி ரஷ்யாவில் உள்ளா சோச்சி நகரில் இரவு 11.30மணிக்கு போட்டி தொடங்கியது. சொந்த மண்ணில் விளையாட உள்ள ரஷ்யா அணிக்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு தெரிவித்தனர். ரசிகர்களின் ஆரவாரத்துடன் குரோஷியாவை எதிர்கொள்ள ரஷ்யா அணி களத்தில் இறங்கியது. போட்டி தொடங்கிய 31வது நிமிடத்தில் ரஷ்யாவை சேர்ந்த டெனிஸ் செரிஷேவ் முதல் கோலை அடித்தார். இதற்கு பதிலடியாக அடுத்த சிலமணி நேரங்களில் குரோஷியாவை சேர்ந்த ஆந்த்ரேஜ் பங்கிற்கு ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் எடுத்த நிலையில் ஆட்டம் விறுவிறுபான கட்டத்தை எட்டியது. அடித்து சில நிமிடங்களுக்கு இரு அணி வீரர்களும் கோலடிக்க முயன்றனர். 100வது நிமிடத்தில் குரோஷியாவை சேர்ந்த டொமோகாஹ் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதனால் குரோஷியா அணி 1-2 என்ற கோல்கள் கணிக்கில் முன்னிலை வகித்தனர்.

இதனை தொடர்ந்து சுதாரித்து கொண்ட ரஷ்யா அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரஷ்ய வீரர் மரிஓ பிகுஏரா 115வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து இரு அணிகளையும் மீண்டும் சமன் செய்தார். கொடுக்கப்பட்ட நேரம் முடிவடைந்த நிலையில் இரு அணிகளுக்கும் பெனால்டிக் ஷீட் அவுட் வாய்ப்பு அளிக்கப்பட்டது

இந்த வாய்ப்பில் ரஷ்யா அணி வீரர்கள் 3 கோல்களை மட்டுமே எடுத்தனர். அடுத்து விளையாடிய குரோஷியா அணி வீரர்கள் 4 கோல்களை எடுத்து அசத்தினர். இந்நிலையில் 4-3 என்ற கோல்கள் கணக்கில் குரோஷியா அணி வெற்றிப்பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதற்கு முன்பு 1998ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் குரோஷியா அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு பெல்ஜியம், பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த சுற்றில் வெற்றிப்பெறும் இரு அணிகள் இறுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.