பிஃபா உலக கோப்பை: விருது வாங்க மறுப்பு தெரிவித்த எகிப்து வீரர்

எகிப்து கால்பந்து அணியின் கோல் கீப்பரான முகமது எல்ஷேனி பிஃபா உலக கோப்பை போட்டியில் வழங்கப்பட்ட ஆட்ட நாயகனுக்கான விருதை மதத்தின் காரணமாக வாங்க மறுப்பு தெரிவித்துள்ளார். மதுபானம்(Budweiser) தயாரிக்கும் நிறுவனத்தால் வழங்கப்பட்ட விருதை வாங்க எக்‌ஷேனி மறுப்பு தெரிவித்தார்.
egypt goal keeper
உலக கோப்பை போட்டியில் குரூப் ஏ அணியில் உள்ள எகிப்து கடந்த வெள்ளிக்கிழமை உருகுவே நாட்டை எதிர்கொண்டது. இதில் எகிப்து அணியின் கோல் கீப்பரான எல்ஷேனி எதிரணியினர் அடித்த பந்தை தடுத்து நிறுத்திய விதம் அனைவரையும் பேச வைத்தது. இதனை தொடர்ந்து 89 நிமிடங்களில் எகிப்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவேவை வெற்றிக்கொண்டது.

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக 29 வயதான எல்ஷேனிக்கு பட்வெய்சர்(பீர் தயாரிப்பு நிறுவனம்) ஆட்ட நாயகனுக்கான டிராபியை வழங்க முன்வந்தது. சிகப்பு நிறத்தில் மதுபாட்டில் போன்ற காட்சி அளிக்க கூடிய டிராபியை பார்த்த எல்ஷேனி அதனை வாங்க மறுப்பு தெரிவித்தார். எகிப்து அணியின் வெற்றியை கொண்டாடும் விழாவில் டிராபியுடன் நின்று புகைப்படம் மட்டும் எடுத்து கொண்ட எல்ஷேனி அதனை வாங்கவில்லை.

மதுபானம் இஸ்லாம் மதத்திற்கு எதிரான ஒன்று என்று குறிப்பிட்ட எல்ஷேனி அது அனைவருக்கும் பொருந்தும் என கூறினார். பிஃபா உலக கோப்பை போட்டியில் பிட்வெய்சர் மிகப்பெரிய பங்குதாரராக உள்ளது. அதன் விருதை எல்ஷேனி வாங்க மறுத்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.