ஃபிஃபா 2018 இறுதி போட்டி…..4 கோல் அடித்து பிரான்ஸ் முன்னிலை

மாஸ்கோ:

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் – குரோசியா இன்று மோதின. போட்டி தொடங்கியது முதல் 2 அணி வீரர்களும் கோல் அடிப்பதற்கு பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

8-வது நிமிடம்

குரோசியாவிற்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை எளிதாக பிரான்ஸ் வீரர்கள் முறியடித்தனர். அதன்பின் வலது கார்னர் அருகில் இருந்து அடித்த பந்தை ராகிடிச் தலையால் முட்டி முயற்சி செய்தார். ஆனால் பலனளிக்கவில்லை.

11-வது நிமிடம்

மிட்பீல்டர் பகுதியில் இருந்து தூக்கி அடித்த பந்தை பெரிசிச் தடுக்க முயன்றார். ஆனால் பந்து காலில் பட்டு ஆப்சைடு சென்றது.

14-வது நிமிடம்

பெர்சிச் பந்தை சிறப்பாக கொண்டு சென்றார். அனால் உமிதித் அதை தடுத்தார்.

17-வது நிமிடம்

பிரான்ஸிற்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திய பிரான்ஸ்க்கு கோல் கிடைத்தது. தலையால் முட்டி தடுக்க முயன்றார் குரோசியா வீரர் மேண்ட்சுகிச். ஆனால் அவரது தலையில் பந்து பட்டு கோல் எல்லைக்குள் புகுந்தது. இதனால் ஓன் கோல் மூலம் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது.

27-வது நிமிடம்

குரோசியாவிற்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை குரோசியா வீரர் தூக்கி அடிக்காமல் த ந்திரமாக வலது பக்கம் கார்னர் திசைக்கு தட்டிவிட்டார். அவர் பந்தை ஹெட்டருக்கு ஏற்ற வகையில் மெதுவாக தூக்கி அடித்தார். பந்து பிரான்ஸ் கோல் எல்லைக்குள் அங்குஇங்குமாக சென்றது. பின்னர் விடா காலிற்குச் சென்றது. அவர் அருகில் நின்ற பெரிசிச்சிடம் அனுப்பினார். அவர் புயல் வேகத்தில் பந்தை உதை்தார். பிரான்ஸ் கோல் கீப்பரை ஏமாற்றி வலது பக்க கம்பம் அருகிலோடு கோல் எல்லைக்குள் புகு ந்தது. இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற்றது.

38-வது நிமிடம்

பிரான்ஸ்க்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பிரான்ஸ் வீரர் கார்னரில் இருந்த அடித்த பந்தை குரோசியா வீரர் பெர்சிக் தலையால் முட்டி தடுக்க முயன்றார். அப்போது ஏதிர்பாரத விதமாக பந்து பெர்சிக் கையில் பட்டது. இதனால் பெனால்டி வாய்ப்பிற்கு பிரான்ஸ் வீரர்கள் முறையிட்டனர். நடுவர் க்ஷிகிஸி மூலம் ஆராய்ந்து பெனால்டி வாய்ப்பு கொடுத்தார். பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் பிரான்ஸ் 2-1 என முன்னிலைப் பெற்றது.

45வது நிமிடம்
இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 2-&1 என முன்னிலை பெற்றது.

59-வது நிமிடம்

போக்பா ஒரு கோல் அடித்தார். பிரான்ஸ் எல்லை அருகில் இருந்து அடித்த பந்தை குரோசியாவின் வலது கார்னர் பக்கம் சென்றது. மப்பே புயல்வேகத்தில் சென்று பந்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோல் எல்லைக்குள் வைத்து கிரிஸ்மானிடம் பாஸ் செய்தார். கிரிஸ்மான் அருகில் நின்ற போக்பாவிடம் கடத்தினார். அவர் புயல் வேகத்தில் அடித்தார். பந்து குரோசியா டிபென்டர் மீது பட்டு மீண்டும் போக்பாவிடம் வந்தது. இடது காலால் உதைத்து கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 3-1 என முன்னிலைப் பெற்றது.

65-வது நிமிடம்

ஹெர்னாண்டஸ் கொடுத்த பாஸை மப்பே அபாரமாக கோலாக்கினார். இதனார் பிரான்ஸ் 4-1 என முன்னிலைப் பெற்றுள்ளது.

69வது நிமிடம்

பிரான்ஸ் கோல் கீப்பர் தவறால், குரோஷியாவின் மான்ட்சுகிச் கோல் அடித்து போட்டியில் விறுவிறுப்பை ஏற்றினார். எனினும் 4-2 என்ற நிலையில் பிரான்ஸ் தொடர்ந்து முன்னிலை வகித்தது