பிஃபா உலக கோப்பை : முதல்முறையாக மைதானத்திற்கு வரும் ஈரான் பெண்கள்

பிஃபா உலக கோப்பை போட்டியை பெண்கள் மைதானத்தில் வந்து காண ஈரான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. பிஃபா உலக கோப்பையில் ஈரான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மொராக்கோவை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றதை ஆயிரக்கணக்கான ஈரானிய பெண்கள் தெருக்களில் வந்து கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது தெஹ்ரான் மாகான சபை முற்றிலும் ரசிகர்களால் சுற்றி வளைக்கப்பட்டது
iran team
1979ம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு புதன்கிழமை ஸ்பெயினுக்கு எதிராக ஈரான் விளையாட உள்ள போட்டியை முதல்முறையாக தெஹ்ரான் மாகாணத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் பார்க்க உள்ளனர். உலக கோப்பை போட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை மொரோக்கோவை எதிர்கொண்ட ஈரான் வெற்றிப்பெற்றதன் காரணமாக குரூப் பி அணியில் முதலிடத்தை பிடித்தது. புதன்கிழமை இரவு 10.30 மணிக்கு நடைபெறும் போட்டியை நேரடியாக மைதானத்தில் இருந்து ஒளிப்பரப்பப்படும் காட்சியை காண 10ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொராக்கோவை எதிர்கொள்ளும் ஈரான் வீரர்களின் அசத்தல் ஆட்டத்தை தெஹ்ரானில் உள்ள அஜாதி மைதானத்தில் நேரடியாக ஒளிப்பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன. போட்டி தொடங்குவதற்கு சிலமணி நேரங்களுக்கு முன்னர் மைதானத்தின் அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளையும் தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து தெஹ்ரான் மைதானத்தை சுற்றிவளைத்த கால்பந்து ரசிகர்கள் மொராக்கோ உடனான போட்டியில் ஈரான் வெற்றிப்பெற்றதை தெருக்களில் கொண்டாடி மகிழ்ந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்களாக இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் உறுப்பினரான தாயிபெஷ் சியாவோஷி விளையாட்டு போட்டிகளை பெண்கள் காணவும், போட்டிகளில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் நீண்ட காலமாக போராடி வருகிறார். தற்போது பெண்கள் மைதானத்திற்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்தார். மேலும், விளையாட்டில் உள்ள விதிகளும் பெண்களுக்கும் பொருந்தும், திங்கட்கிழமை ஈரான் போர்ச்சுக்கல் அணியுடன் மோதுவதை அதே மைதானத்தில் இருந்து பார்ப்போம், தொடர்ந்து நடைபெறும் அனைத்து போட்டிகளையும் குடும்பத்துடன் சேர்ந்து அஜாதி மைதானத்தில் பார்ப்போம் என்று தாயிபெஷ் கூறியுள்ளார்.

ஆனாலும் சில முஸ்லீம் மதக்குருக்கள் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.