பிஃபா உலக கோப்பை: காலிறுதி சுற்றில் பங்கேற்கும் அணிகள்

21வது உல்க கோப்பை கால்பந்து போட்டியில் காலிறுதி சுற்றுகள் நாளை தொடங்க உள்ளது. ரஷ்யாவில் உள்ள பிமாண்ட மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகள் நேற்று முன்தினம் முடிவடைந்தன. இந்நிலையில் காலிறுதி போட்டிக்கு உருகுவே, பிரேசில், ஸ்வீடன், இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், ரஷ்யா, குரேஷியா உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன. கால்பந்து போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் போட்டிகள் சூடுப்பிடிக்க தொடங்கி உள்ளன. இந்த போட்டிகளை காண உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்ப்பார்த்து உள்ளனர்.

fifa

ஜூலை 6ம் தேதி நடைபெற உள்ள போட்டிகள்:

இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் உருகுவே மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதுகின்றனர்.

இரவு 11.30 மணிக்கு நடைபெற உள்ள போட்டிகளில் பிரேசில் அணியுடன், பெல்ஜியம் அணி மோத உள்ளது.

fifa-1

ஜூலை 7ம் தேதி நடைபெற உள்ள போட்டிகள்:

இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள போட்டியில் ஸ்வீடன் அணியை எதிர்த்து இங்கிலாந்து மோத உள்ளது.

இரவு 11.30 மணிக்கு நடைபெற உள்ள போட்டியில் ரஷ்யா அணியுடன் குரோஷியா அணி பலத்தை நிரூபிக்க உள்ளது.

இந்த 4 போட்டிகளிலும் வெற்றிப்பெறும் 4 அணிகள் அடுத்து நடைபெற உள்ள அரையிறுதி சுற்றில் பங்கேற்கும்.