சென்னை:

சென்னையின் ஐந்தாவது நீர்தேக்க பணிகள் மார்சில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,  நகரத்தின் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவதற்காக தெர்வோய் காண்டிகாய் கண்ணன்கோட்டையில் ஐந்தாவது நீர்த்தேக்கத்தை உருவாக்கும் திட்ட பணிகள் 95% முடிந்து விட்டது என்றார்.

புதிதாக உருவாக்கப்படும் இந்த நீர்தேக்கத்தில் சில பகுதிகளில் ஏற்கனவே நீர் தேங்கி இருக்கிறது. இந்நிலையில், அடுத்த வடகிழக்கு பருவமழையின் போது அதிகளவில் நீர் சேமிக்கப்பட்டு விடும் என்று நீர்வளத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தெர்வோய் காண்டிகாய் மற்றும் கண்ணங்கோட்டை கிராமங்களில் உள்ள இரண்டு நீர்நிலைகளை இணைத்து 380 கோடி ரூபாயிலான இந்த திட்டம் கடந்த 2013-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சென்னையின் பூண்டி, ரெட் ஹில்ஸ், சோளவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய நீர்த்தேக்கங்களிலிருந்து இந்த நீர்தேக்கம் தண்ணீரை பெறும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், சென்னையின் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நீர்த்தேக்கத்தை உருவாக்கும் பணிகள் மார்ச் இறுதிக்குள் நிறைவடையும் என்றும், கிட்டத்தட்ட 95% பணிகள் முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்

குளங்களை உருவாக்குவது, ஒரு நீர் தேக்கத்தை உருவாக்க திட்டத்தில் முக்கிய அங்கமாகும். கண்ணகோட்டையில் உள்ள 7.15 கிலோ மீட்டர் நீளமுள்ள குளத்தில், 150 மீட்டர் மட்டுமே உருவாக்கப்பட உள்ளது. கண்ணங்கோட்டையை கரடிபுத்தூருடன் இணைக்கும் சாலையின் ஒரு பகுதி நீர்த்தேக்கக் கட்டுமானத்திற்காக மூடப்பட வேண்டியிருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

பைப்லைன் பணிகள்: 

சென்னை மெட்ரோவாட்டர் பூண்டியில் உள்ள நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீரை அனுப்ப 66 கி.மீ குழாய் அமைக்கும் பணிகளையும் முடித்துள்ளது. கிருஷ்ணா நீரைக் கொண்டுவரும் கண்டலேரு பூண்டி கால்வாயுடன் இந்த குழாய் இணைக்கப்படும். நீர்த்தேக்கத்திலிருந்து உபரி வெள்ளநீரை திசை திருப்பும் ஒரு சேனலையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். திருவள்ளூர் மாவட்டத்தில் பூவலம்பேடு ஏரியில் உள்ளதைப் போல 11 தொட்டிகளை நிரப்ப இது உதவும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

திட்டத்தின் கடைசி கட்டமாக நீர்த்தேக்கத்தை ஆழமாக்குவது. இதன் மூலம் 500 மில்லியன் கன அடி நீரை சேமிக்க முடியும். இதுமட்டுமின்றி 800 நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும்
அதிகாரிகள் தெரிவித்தனர்.