பிக் பாஸ் வீட்டில் இன்று ஐந்தாவது நாள் .
ப்ரோமோ – 1


நேற்றைய தினம் பிக்பாஸில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று சண்டை குக்கிங் டீம் பக்கம் திரும்பியுள்ளது. ரேகா மற்றும் சனம் இடையே ஏற்படும் மோதலை இன்றைய வார கேப்டன் சரி செய்ய முயல்கிறார்.
ப்ரோமோ – 2
https://twitter.com/vijaytelevision/status/1314453088418193410
இரண்டாவது ப்ரோமோவில் வீட்டில் இருக்க தகுதி இல்லாதவர்கள் என நான்கு பேரை நாமினேட் செய்ய சொல்கிறார் பிக் பாஸ். சம்யுக்தா ஆஜீத், ரம்யா பாண்டியன்,ஷிவானி நாராயணன் மற்றும் சுரேஷை நாமினேட் செய்கிறார். சுரேஷ் கோபமடைந்து அங்கிருந்து எழுந்து செல்கிறார்.
ப்ரோமோ – 3


மூன்றாவது ப்ரோமோவில் பாலா தனது கதையை வீட்டில் இருப்பவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.பாலாவின் உருக்கமான கதையை கேட்ட வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஆறுதல் தெரிவிக்கின்றனர்.