சென்னை ஐகோர்ட்டில் அதிமுக வழக்கறிஞர்களிடையே குடுமிபிடி சண்டை!

--

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் அதிமுக வழக்கறிஞர்களிடையே குடுமிபிடி சண்டை நடைபெற்றது.

அதிமுகவின் இரு அணிகளை சேர்ந்த வழக்கறிஞளுக்கு இடையே நடைபெற்ற கடும் வாக்குவாதம் ஐகோர்ட்டு வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த  2004ம் ஆண்டு அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராவது தொடர்பாக ஓ.பி.எஸ்-சசிகலா வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

புதுவையில் போலி வாக்காளர்களை சேர்த்த குற்றச்சாட்டு தொடர்பாக அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸ் தொடர்பாக ஆஜர் ஆவதில் இரு தரப்பு வழக்கறிஞர்களிடையே மோதல் ஏற்பட்டது.

வழக்கில் ஆஜராக தங்களுக்கே உரிமை உள்ளதாக கூறி இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக வழக்கு பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.