தேசிய வாக்காளர் தினம்: சக்தி வாய்ந்த இந்தியாவை உருவாக்குங்கள்! கமல் டிவிட்

--

சென்னை:

ன்று தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுவதை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார்.

அதில், சக்தி வாய்ந்த இந்தியாவை உருவாக்குங்கள் என்று இளைஞர்களுக்கு  கமல் டிவிட் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று 9வது தேசிய வாக்காளர் தினம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வாக்களிக்கும் உரிமை குறித்து டிவிட் போட்டுள்ளார். அதில்,  தனக்கு  இளம் மனதில் எப்போதும் ஒரு ஆசை இருந்தது.  வாக்களிக்க வேண்டிய அவசியத்தை மிக உயர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். என் நண்பர்கள் பலர் மோசமாக இருந்தனர். அவர்கள் வாக்களிக்கவில்லை என்பதால் தான், இப்போது நாம் விளைவுகளை அனுபவிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாக்களிக்கும் உரிமை நமது விதியை வடிவமைக்கிறது. ஆகவே, பொறுப்புடன் நாட்டின் சுதந்திரத்தை வடிவமைக்க தொடங்குவோம். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தங்களை இளைஞர்கள் இணைத்து கொண்டால், வலிமைமிக்க இந்தியாவை உருவாக்குவதற்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.