ரியோ:
லிம்பிக் போட்டியில் தனது முதல் ஒலிம்பிக் பதக்கத்தை அதுவும் தங்கப்பதக்கத்தை ஃபிஜி தீவு  பெற்றுள்ளது.
பசுபிக் பெருங்கடலின் தென் பகுதியில் அமைந்துள்ள சிறு தீவுக்கூட்ட நாடு ஃபிஜி தீவுகள் ஆகும்.  இந்த நாட்டின் ஆளுகைக்குட்பட்ட  332 தீவுகளில் 110 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். மக்கள்தொகை, சுமார் 8 லட்சத்து 50 பேர்.
இந்த சிறு தீவுநாடு, ஆண்கள் ரக்பி விளையாட்டில் பிரிட்டனை வென்று,  தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. ஒலிம்பிக்கில் இந்நாடு பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.
a
 
இது குறித்து கருத்து கூறிய ஃபிஜி நாட்டின் பிரதமர் பைனிமராமா, “ஃபிஜி வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணம். இதை கொண்டாடும் விதமாக பொதுவிடுமுறை அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா இதுவரை ஏதும் பதக்கம் வாங்கவில்லை என்றாலும், ஃபிஜியின் வெற்றியில் மகிழ்ச்சி அடையலாம். ஏனென்றால்,  ஃபிஜி தீவில் பெரும்பான்மையாக இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர் என்பதும், இங்கு இந்தியும் ஆட்சி மொழி என்பதும் குறிப்பிடத்தக்கது.