டெல்லி:
நாடு முழுவதும் வருமான வரித்தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர் 30ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று  லாக்டவுன் காரணமாக, வேலைவாய்ப்பின்றி மக்கள்  கடந்த 4 மாதங்களாக கடுமையான துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதன் காரணமாக, 2018-19 நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனப்டி, ஐடிஆர் (IT Return) தாக்கல் செய்ய நவம்பர் 30ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக வருமான வரித்துறை அறிவித்து உள்ளது.
தற்போதைய நிலவரத்தை புரிந்துகொண்டு , காலக்கெடுவை மேலும் நீட்டித்து இருப்பதாகவும்,  இது சிறப்பாக திட்டமிட உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் தெரிவித்து உள்ளது.