சுவாதி படுகொலை பற்றிய திரைப்படம் 24 ஆம் தேதி ஓடிடியில் வெளியீடு

சென்னை

சுவாதி படுகொலை பற்றிய நுங்கம்பாக்கம் திரைப்படம் 24 ஆம் தேதி அன்று ஓ டி டி  யில் வெளியாகிறது.

ஐடி பணியாளர் சுவாதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து பல ஊகங்கள் வெளியாகின

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ராம்குமார் என்பவர் வழக்கு விசாரணை தொடங்கும் முன்னரே சிறையில் தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு நுங்கம்பாக்கம் என்னும் பெயரில் திரைப்படம் தயாரிக்கப்படத்து.

பல்வேறு சர்ச்சைகளால் படம் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் நுங்கம்பாக்கம் திரைப்படம் ஓடிடியில் 24 ஆம் தேதி வெளி வர உள்ளது.

இந்த தகவலை அப்படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வன் தெரிவித்துள்ளார்.

மேலும் இரண்டரை ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு இப்படம் வெளியிட உள்ளதாகவும் கூறி உள்ளார்.’