குறும்பட இயக்குனர் அருண்மொழி மாரடைப்பால் மரணம்…!

இயக்கம், திரைக்கதை, நடிப்பு, நாடகம், ஆவணப்படம், திரை மொழி கற்பித்தல் ஆகியவற்றில் தனித்து விளங்கிய இயக்குநர் அருண்மொழி மாரடைப்பால் நேற்று இரவு சென்னையில் காலமானார்.

அவர் மறைவைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .அவரிடம் திரைப்படக் கல்வி பயின்ற மாணவ மாணவிகளும், திரைப்பட இயக்குநர்கள் பலரும் அவரது மறைவுக்குப் பெரிதும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர்கள் ஹரிஹரன், லெனின் பாரதி, வசந்த் ஆகியோர் காலையிலேயே இயக்குநர் அருண்மொழிக்கு இறுதி மரியாதை செலுத்த வந்தனர். மாணவர்களும் திரைப்பட ஆர்வலர்களும் இன்று காலையிலிருந்து திருவான்மியூரிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி