சென்னை:

மிழ் சினிமாத்துறையின் முதுபெரும் இயக்குநா்களில் ஒருவரான சி.வி.ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

தமிழ் திரைத்துறையில் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்த சி.வி.ராஜேந்திரன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் இயக்குநா் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

இந்நிலையில், 1967ல் அனுபவம் புதுமை என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக  அறிமுகமானார். மேலும், சிவாஜி கணேசன் நடித்த கலாட்டா கல்யாணம், சிவகாமியின் செல்வம் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கினார். நடிகா் விஜய் நடித்த ஒன்ஸ்மோர் திரைப்படத்தை தயாரிக்கும் செய்தார்.

இயக்குநா் ராஜேந்திரனின் இறப்புக்கு சினிமாத்துறையினரும் அவரது ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனா்.