டிகை ஷாலினி வட்ணிகட்டி. இவர் தெலுங்கில் ’கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’ படத்தில் ஹீரோயினாக நடித்தார். இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.


இயக்குனர் ஒருவருக்கும் ஷாலினி வட்ணிகட்டிக்கும் காதல் , இவர்கள் திருமணம் செய்யவிருப்பதாக சில மாதங்களுக்கு முன் கிசுகிசு வந்தது, ஆனால் அந்த இயக்குனர் யார் என்பது உறுதியாகவில்லை. தற்போது அதனை இருவருமே தங்களது திருமணம் மூலம் உறுதி செய்திருக்கின்றனர்.
நடிகை ஷாலினி வட்ணிகட்டி இயக்குனர் மனோஜ் பீடா திருமணம் இல்லத்தில் நடந்தது. கொரோனா ஊரடங்குகள் விதிகடைபிடித்து இத்திருமணம் நடத்தப் பட்டது.
இயக்குனர் மனோஜ் பீடா தமிழில் குரு சோமசுந்தரம், அனிஷா அம்புரோஸ் நடித்த ’வஞ்சகர் உலகம்’ படத்தை இயக்கியவர். திருமணத்தில் நண்பர்கள், குடும்பத்தினர் மட்டும் பங்கேற்றனர்.