இந்துமதம் அவமதிப்பு: திரைப்பட இயக்குனர் வேலுபிரபாகரன் கைது…

--
சென்னை:
ந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்புவதாக அளிக்கப்பட்ட புகாரில் இயக்குநர் வேலு பிரபாகரன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டதாக பாரத் முன்னணி அளித்த புகாரில் இயக்குநர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலு பிரபாகரன் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சி.சி.பி குற்ற எண் 257/2020 u / s 153, 153 A (1) (அ), 295A, 298, 505 (1), 505 (2) ஐபிசி-யில் இந்து மதத்தை அவமதித்ததாக சென்னை நகர காவல்துறையினரால்  திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.