தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்து தொடர்பான சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து முகமது பாஷா, சிவா, நவீன் மற்றும் சென்ன கேசவலு ஆகியோரைக் கைது செய்தது காவல்துறை.

இன்று (டிசம்பர் 6) அக்குற்றவாளிகள் பெண் மருத்துவர் இறந்த அதே இடத்தில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.

இந்த என்கவுன்ட்டருக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும், ஹைதராபாத் காவல் துறையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக நடிகர் விவேக் தனது ட்விட்டர் பதிவில், “நீதி வென்றது… ! அந்த சகோதரியின் ஆன்மா அமைதியடையட்டும்! வக்கிர புத்தி கொண்டவர்களுக்கு இதுவொரு பாடமாக இருக்கும்! இந்தக் கடும் நடவடிக்கையை மேற்கொண்ட காவல் அதிகாரிகளுக்கு ஒரு மிகப்பெரிய சல்யூட்” என்று தெரிவித்துள்ளார்.

நாகார்ஜுனா: இன்று காலை செய்தியைப் பார்த்தேன். நீதி வழங்கப்பட்டுள்ளது!

ஜுனியர் என்.டி.ஆர்: நீதி வென்றுள்ளது! இப்போது உன் ஆன்மா சாந்தி அடையட்டும் திஷா.

ரகுல் ப்ரீத் சிங்: பாலியல் வன்கொடுமை போன்ற ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு எவ்வளவு தூரம் உங்களால் ஓடமுடியும்… நன்றி தெலங்கானா போலீஸ்.

ஷாலினி பாண்டே: வரலாற்றில் நினைவுகூர வேண்டிய நாள். தெலங்கானா போலீஸ் மற்றும் தெலங்கானா அரசால் எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு.

கார்த்திக் சுப்புராஜ்: உண்மை சுடும். அவர்கள் இதற்குத் தகுதியானவர்கள் தான்!!

கல்யாண்ராம்: துக்கத்தில் இருக்கும் குடும்பத்தின் வலியை எதைக் கொண்டும் அழிக்க முடியாது. ஆனால், இது சற்று ஆறுதலை அளிக்கும் என்று நம்புகிறேன். நீதி வென்றுள்ளது. உன் ஆன்மா சாந்தி அடையட்டும் திஷா!

ராஜசேகர்: நீதி வென்றுள்ளது. நமது முதல்வருக்கும், நமது காவல்துறைக்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறோம். உன் ஆன்மா சாந்தி அடையட்டும் திஷா!

பிரசன்னா: ஹைதராபாத் காவல்துறைக்கு நன்றி.
சமந்தா: நான் தெலங்கானாவை நேசிக்கிறேன். பயம் ஒரு மிகப்பெரிய தீர்வு சில நேரங்களின் அது மட்டுமே தீர்வு.

அல்லு அர்ஜுன்: நீதி வென்றது.

விஷால்: இறுதியில் நீதி வென்றது. தெலங்கானா காவல் துறையினருக்கு நன்றி.

ஹன்சிகா: நீதி வென்றது.

ராஷி கண்ணா: ஹைதராபாத் காவல் துறையினருக்கு சல்யூட். நீதி வென்றது.