திரைத்துறையினர் பொறுப்புடன் நடக்க வேண்டும்: நீதிபதி அறிவுரை

 

சென்னை:

ளைஞர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையின்போது, “திரைத்துறையினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்!” என்று நீதிபதி தெரிவித்தார்.

சென்னை புறநகர் பகுதியான மணலியை சேர்ந்த பிரபுகுமார். இவர், கடந்த ஜூலை 24 ம் தேதியன்று, தாயுடன் சென்ற 16 வயது சிறுமியை பார்த்து கிண்டல் செய்துள்ளார். சாமி என்ற திரைப்படத்தில் விக்ரம், த்ரிஷா ஆடிப்பாடிய , ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா… ஓடி போயி கல்யாணம் தான் கட்டிக்கலாமா’ என்ற சினிமா பாடலை  அச்சிறுமியைப் பார்த்து பாடியுள்ளார் இவரைத் தட்டிக்கேட்ட சிறுமியின் தாயை தாக்கியோதோடு,  கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதையடுத்து பிரபுகுமார் மீது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பிரபுகுமார் மனுத்தாக்கல் செய்தார்.

download

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 10 ஆயிரம் ரூபாய் பிணையுடன், பிரபுகுமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.   மேலும், திரைப்படத்துறையினரின் நடவடிக்கைகளுக்கு தன்னுடைய அதிருப்தியை தெரிவித்தார்.

“திரைப்படம் போன்ற ஊடகங்கள், இளைய சமுதாயத்தினரின்  குருவாக உள்ளது.  எனவே, திரையுலகத்தினர் எப்போதும் தன்னுடைய சமுதாயப் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவேண்டும்.  எதிர்கால தூண்களான இளைய சமுதாயத்தினரின் மனதில் நல்ல எண்ணத்தை புகுத்தவேண்டும். அவர்களது மனதில் நல்ல எண்ணங்களையும், சமுதாய பொறுப்புகளையும் பதிய வைக்கவேண்டும்.  இதன் மூலம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க திரையுலகினர் முன்வரவேண்டும்” என்று நீதிபதி  தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி