டிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விசாரணையில் பாந்த்ரா காவல் நிலையத்திற்கு தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி இன்று வந்தார். அவரது வாக்கு மூலத்தை பதிவு செய்ய பன்சாலியை பாந்த்ரா போலீசார் வரவழைத்திருந்தனர்.

மதியம் 12:30 மணியளவில் பன்சாலி காவல் நிலையத்திற்கு வந்தார், அவருடன் அவரது வழக்கறிஞரும் அவரது சில பணி யாளர்களும் வந்தனர். பன்சாலி ஒரு திரைப்படத்தை ராஜ்புத் நடிக்க வாய்ப்பளித்தார். அப்போது பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் சுஷாந்த் ஒப்பந்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது எனவே பன்சாலியுடன் சுஷாந்த் பணியாற்ற முடியவில்லை. அப்படம் பின்னர் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறியது.
சுஷாந்த் சிங் தற்கொலை எண்ணத்துக்கு வர என்ன காரணம் என்ற கோணங்களில் தற்போது போலீசார் விசாரிக்கின்றனர். தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான முறையில் சுஷாந்தோடு தொடர்பு கொண்டிருந்த அனைவருமே காவல்துறையினரால் தற்போது அழைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
29 க்கும் மேற்பட்ட நபர்கள் இதுவரை தங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். சிலர் பல முறை அழைக்கப்பட்டுன் வந்தபாடில்லை. அவர்களுக்கு மீண்டும் போலிசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட ஜூன் 14 ம் தேதி அவரது இல்லத்தில் இருந்த சுஷாந்தின் மேலாளர் சித்தார்த் பிட்டானியும் தனது வாக்குமூலத்தை 2 முறை போலீசில் பதிவு செய்தார். சில நெருங்கிய உறவினர்களின் வாக்குமூலம் விசாரணைக் குழுவால் மீண்டும் பதிவு செய்யப்படலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
பாலிவுட் செய்தி போர்ட்டலில் பணி புரியும் ஒரு பத்திரிகையாளரும் ராஜ்புத் மீது செய்த ஒரு கட்டுரை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கதை சில மக்கள் தொடர்பு நிறுவனம் அல்லது வேறு யார் மூலமாக அவருக்கு அனுப்பப்பட்டதா என்று புலனாய்வாளர்கள் பத்திரிகையா ளரிடம் கேள்வி எழுப்பினர்.