விடுமுறை தினங்களில் பல படம் வெளியாகும் விவகாரம்: தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை

கிறிஸ்துமல், பொங்கல் போன்ற விடுமுறை தினங்களில் படங்கள் வெளியாவது குறித்து தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

பொதுவாக தீபாவளி, பொங்கல் மற்றும் பண்டிகை தினங்களில் பிரபல நடிகர்கள் படம் உள்பட ஏராளமான படங்கள் வெளியாவது வழக்கம். இதன் காரணமாக சிறுபடங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இந்த நிலையில், தற்போது கிறிதுமஸ் மற்றும்  பொங்கல் போன்ற விசேஷ நாட்களில்  ஏராளமான படங்கள்  வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக சிறிய திரைப்படஙகள் திரையரங்குகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஏராளமான  புகார்கள் கூறப்பட்டது.

இந்த நிலையில், புதிய திரைப்படங்கள் வெளியீட்டுக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டனர்.

அதில் படம் வெளியாவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதையடுத்து, திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

அதில், ஒரே நேரத்தில் படம் வெளியாவது குறித்து விவாதிக்கப்பட்டது,  ஒரே தேதியில் பல படங்கள் வெளியாவதால் உண்டாகும் பாதிப்புகள் குறித்து இந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. ஆனால் இதை எந்தத் தயாரிப்பாளரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் சமயங்களில் தயாரிப்பாளர்கள் அவர்களின் விருப்பத்துக்கேற்ப படங்களை வெளியிட்டுக்கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.