திரைவிமர்சனம்: 2.o

மது உடலின் ஒரு பாகமாகவிட்ட செல்போன்களால் எப்படிப்பட்ட ஆபத்துக்கள் நேரும் என்பதை தனது கிராபிக்ஸ் பாணியில் பிரம்மாண்டமாய் சொல்லி அசத்தியிருக்கிறார் ஷங்கர்.

நகரத்தில் மக்கள் வைத்திருக்கும் செல்போன்களும் அனைத்தும் திடீரென காற்றில் பறக்கிறது. செல்போன் கடைகளில் உள்ள செல்போன்களும் ஒட்டுமொத்தமாக பறக்க. கட்டிடம் இடிகிறது. செல்போன் கடை வைத்திருப்பவர், அலைபேசி நிறுவனங்களுக்கு அனுமதி அளித்த அமைச்சர்கள் எல்லோரும் செல்போனினாலேயே கொல்லப்படுகறார்கள்.

மக்கள் அச்சத்தில் உறைகிறார்கள். அரசோ என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறது.  அப்போது விஞ்ஞானி வசீகரன், தான் உருவாக்கிய ரோபோட் சிட்டியால்தான் மக்களை காப்பாற்ற முடியும் என்கிறார். முதல்பாகமான எந்திரனில் பிரித்து மியூசியத்தில் வைத்த ரோபோ சிட்டியை உயிர்பிக்கிறார்.

அதன்பிறகு, செல்போன்கள் பறக்க காரணம் என்பது அக்சய்குமாரின் பிளாஷ்பேக்கில் தெரிகிறது. பிறகு சிட்டி எப்படி மக்களை காக்கிறார் என்பதே கதை.

வசீகரன், சிட்டி என எல்லா தோற்றங்களிலும் அசரடிக்கிறார் ரஜினி. முதல் பாகத்தில் வந்த வசீகரனின் காதலி (ஐஸ்வர்யா) இதில் போனில் மட்டும் பேசுகிறார். அவரிடம் பயந்து சமாளிக்கும் காட்சிகளாகட்டும், சிட்டியை உருவாக்க கூடாது என்ற அமைச்சர் பிறகு வழிக்கு வந்த பிறகு அவரிடம் கிண்டலாக பேசுவதாகட்டும் ரசித்து சிரிக்க வைக்கிறார் ரஜினி.

சிட்டிதான் ஸ்பெசல். வில்லனை எதிர்த்து கிண்டலாக சவால் விடுவது.. பெண் ரோபோட்டிடம் வழிவது.. என்று மனசுக்கு நெருக்கமாகிவிடுகிறார். அதோடு,  ரஜினிக்கு இன்னுமொரு ஸ்பெஷல் தோற்றம். அவரது ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி அளிக்கும்.

ரஜினி அறிமுக காட்சியில்கூட அதிரடி ஏதும் இல்லை என்பது ஆச்சரியம்தான். மாணவர்கள் சிலர் விஞ்ஞானி வசீகரன் ரஜினியை சந்திக்க வர.. தனது அறையலிருந்து கேஷூவலாக வந்து வரவேற்கிறார். கதைக்கு, இயக்குநரின் எண்ணத்துக்கு முக்கியத்தவம் அளித்து தன்னை ஒப்படைத்திருக்கிறார் ரஜினி. சூப்பர் ஸ்டாராக இருந்தும், ஒரு இயக்குநரின் நடிகராக தன்னை முன்னிறுத்தம் ரஜினியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

வசீகரனின் உதவியளரான பெண் ரோபாட்டாக வருகிறார் எமிஜாக்சன். சிட்டி மீது இவர் காதல் பார்வை வீசுவது.. “வடபோச்சே..” “நாலு பேருக்கு நல்லது என்றால் எதுவும் தப்பல்லை” என்று சினிமா வசனங்களை சொல்லி சிரிக்கவைக்கிறார்.

பறவைகளின் காதலராக வயது முதிர்ந்த வேடத்தில் அக்சய்குமார் ஈர்க்கிறார். .  பறவைகளுக்காக உருகுவது, அரசியல்வாதிகளிடம் போராடுவது என்று  இந்தியன் தாத்தாவை கொஞ்சம் நினைவுபடுத்துகிறார்.  அதேபோல இறந்த பிறகு செல்போன் வைத்திருப்பவர்களை பழிவாங்குவதில் அத்தனை உக்கிரம். மிரட்டியிருக்கிறார் மனிதர்.

2.0 படத்தின் நாயகன் வி.எப்.எக்ஸ், (VFX)தான். உலகின் முக்கியமான ஸ்டூடியோக்களில் 3000 கலைஞர்களால் உருவாக்கப்பட்ட அந்தக் காட்சிகள் ஒவ்வொன்றும் 3டியில் பிரமிக்க வைக்கின்றன. அந்தவகையில் VFX மேற்பார்வையில் சீனிவாசனின் பணி அற்புதம்.  ஒரு திரைப்படத்திற்காக கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் உழைத்து,   கற்பனைகளை எல்லாம் காட்சிகளாக்கியிருக்கிறார்கள்.

லட்சக்கணக்கான செல்போன்கள் வெள்ளம் போல் சாலையில் வரும் காட்சி, பறவைகள் தியேட்டருக்குள் நம்கைகளுக்கு அருகில் பறப்பது.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

 

பொதுவாக 3டி படம் என்றால் சிலகாட்சிகள்தான் முப்பரிமாணத்தில் இருக்கும். இதில் பெரும்பாலான காட்சிகள் முப்பரிமாணத்தில் எடுத்து பிரமிக்க வைத்திருக்கிறார்கள்.

மேலும், ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசை படத்துக்குகூடுதல் பலம். நிரவ்ஷா ஒளிப்பதிவு சிறப்பு.

படம் துவங்கும்போதே இது ஷங்கர் படம் என்பதை உணர்த்திவிடுகிறார்கள். டைட்டிலில் அவரது பெயருக்குப் பிறகுதான் ரஜினியின் பெயர்.

செல்போன்களாலேயே உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட பறவை.. அதே போல ராட்சன்.. என்று வழக்கம்போல தாறுமாறாக கற்பனை செய்து அதை காட்சிப்டுத்தியும் இருக்கும் ஷங்கர் முயற்சி பிரமிக்க வைக்கிறது.

யோசித்தப்பார்த்தால் தன்னை கொன்றவர்களை ஆவியாக வந்து பழிவாங்கும் ராமநாராயணன் கான்செப்ட்தான். அதில்  டிஜிட்டல், கிராபிக்ஸ் எல்லாம் சேர்த்து  கொடுத்து ஹாலிவுட் ரே்ஞ்சுக்கு அசத்தியிருக்கிறார்கள். குழந்தைகளுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய விஷூவல் மேஜிக்!

கார்ட்டூன் கேலரி