திரை விமர்சனம்: காலா

தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மும்பை  சேரிப்பகுதியான தாராவியில் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழந்துவருகிறார் காலா ரஜினி.  மகன், மருமகள் என அனைவரும் கூட்டுக்கும்பமாக வசிக்கிறார்கள்.

மும்பையில் பெரும் புள்ளியாகவும், அரசியல் கட்சி தலைவராகவும் இருப்பவர் நானா படேகர். இவர், தாராவி பகுதியில் இருக்கும் குடிசை மக்களை துரத்தி விட்டு, அடுக்குமாடி குடியிருப்பாக மாற்ற திட்டமிடுகிறார். இதற்காக சம்பத் மூலமாக கட்டுமான பணியில் ஈடுபடுகிறார்.

தனியாக ஒரு அமைப்பு ஏற்படுத்தி, மக்களுக்கு உதவி வரும் ரஜினியின் இளைய மகன், சம்பத்தை தட்டிக்கேட்கிறார். போராட்டம் நடத்துகிறார்.

இதனால் அங்கு பிரச்சனை ஏற்படுகிறது. ரஜினி வந்து சம்பத் ஆட்களை அடித்து உதைத்து விரட்டுகிறார்.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் வருகிறது. இதில் நானா படேகர் சார்பாக நின்ற சம்பத்தை, ரஜினியின் ஆள் தோற்கடித்துவிடுகறார்.

இதனால், அவமானத்துக்குள்ளானதாக நினைக்கும் சம்பத், ரஜினியை தீர்த்து கட்ட திட்டமிடுகிறார்.

இதற்கிடையில், ரஜினியின் முன்னாள் காதலியான ஹீமா குரேசி வெளிநாட்டில் படித்து விட்டு தாராவி பகுதிக்கு  வருகிறார். இவரும் குடிசைகளை அகற்றிவிட்டு அடிக்குமாடி  குடியிருப்புகள் கட்ட நினைக்கிறார். இதை ரஜினி எதிர்க்கிறார்.

இறுதியில், தாராவியை அழிக்க நினைக்கும் நானா படேகரையும், ஹீமா குரேசியையும் ரஜினி எப்படி எதிர்கொண்டு வெற்றி பெற்றார் என்பதே மீதிக்கதை.

காலாவாக வரும் ரஜினி பாசமான குடும்பத்தலைவனாகவும், மக்கள் மீது அன்புகொண்ட மனிதனாகவும்  மக்களுக்கு எதிரானவர்களை கேள்வி கேட்டு போராடும் தலைவனாகவும் வருகிறார்.

குடும்பத்தினர் மீது பாசம் காட்டும் காட்சிகளாகட்டும் எதிரிகளுக்கு சவால் விடும் காட்சிகளாகட்டும் வழக்கம் போல ரஜினியின் சிறப்பான நடிப்பு வெளிப்படுகிறது.

மனைவி ஈஸ்வரிராவ்வுடனான பாசக் காட்சிகள் முன்னாள் காதலியாக வரும் ஹீமா குரேசியுடனா லேசான (!)  ரொமன்ஸ் என  ரசிக்க வைத்திருக்கிறார். நானா படேகரை எதிர்க்கும் போது மிரட்டலான நடிப்பில் அதே இளமைத்துடிப்புள்ள ரஜினியை காண முடிகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அவர் படும் வேதனை.. எதார்த்தம்.

நடன காட்சியில் அசத்துகிறார்.  வசனம் பேசும்போது வழக்கம்போல் அனல் தெறிக்கிறது.

சண்டைக்காட்சிகளில் அதகளம்.

அரசியல்வாதியாக வரும் நானா படேகர் வழக்கம் போல் சிறப்பான நடிப்பை வெளிப்டுத்தியிருக்கிறார். சிறு சிறு  முக பாவனைகளிலேயே ரசிக்க வைத்துவிடுகிறார்.

முக்கிய காட்சிகளில் கூட யதார்த்தமாக அதே நேரம் அசத்தலாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சம்பத் மற்றும் ரஜினியின் நண்பராக வரும் சமுத்திரகனி

எப்போதும்போல் இயல்பான நடிப்பு.

ரஜினியின் மனைவியாக வரும் ஈஸ்வரிராவும் அப்படியே. ரஜினி ரொமான்ஸ் காட்சிகளில் அப்படியயோர் வெட்கம், பூரிப்பு, இவருக்கு.

ரஜினியின், முன்னாள் காதலியாக வரும் ஹீமோ குரேசி, காதல் காட்சிகளிலும் பிறகு ரஜினியுடனான மோதல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும் உணர்வையும் ரஜினி மூலமாக இயல்பாக  வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.

கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களை கவனத்துடன் தேர்வு செய்திருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசை ரசிக்கவைக்கிறது. பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிவிட்டது. காட்சியுடன் பார்க்கும்பதோது கூடுதலாக ரசிக்கவைக்கிறது. பின்னணி இசையும் அருமை.  முரளியின் ஒளிப்பதிவு கண்களுக்கு இதம்.

மொத்தத்தில் ‘காலா’ அனைவரையும் ரசிக்கவைக்கும் படம்.

பின்குறிப்பு:

படத்தில் ஜல்லிக்கட்டு  போராட்டம் போலவே ஒரு மிகப் பெரிய போராட்டத்தை நடத்துகிறார் காலா ரஜினி. அப் போராட்டத்தின் முடிவில் தூத்துக்குடி கலவரத்தைப்போலவே ஒரு பெரும்  கலவரம் நடக்கிறது.

அந்தக் கலவரத்தை காவல்துறையே தூண்டிவிட்டு, துப்பாக்கிச் சூடு நடத்துகிறது.

 

 

 

கார்ட்டூன் கேலரி