Random image

மாரி – 2 விமர்சனம்

 

தை இல்லாமல் திரைப்படம் எடுப்பது என்பதை பற்றி வகுப்பெடுப்பவர்களுக்கான புத்தகம் தான் மாரி – 2 திரைப்படம்.

சினிமா என்றால் அதில் ஒரு கதை இருக்க வேண்டும் என்பது தெரியாதவரல்ல நடிகர் தனுஷ்

ஆனால் மாரி- 2ல்கதை என்கிற ஒன்றைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி தனக்கு வாழ்க கோஷம் போடும் ரசிகர்களைத் திருப்திப்படுத்தினால் போதும் என்கிற எண்ணத்தில் தனுஷ் எடுத்திருக்கும் படம்தான் மாரி 2.

தனுஷின் தோற்றம் மற்றும் நடவடிக்கைகளில் அவர் சென்னையில் பெரிய ரவுடி என்று சொல்கிறார்கள். அவரும் அதற்கேற்ப தனது புடலங்காய்் சைஸ் உடம்பைை வைத்துக்் கொண்டு படத்தில் கொடுத்திருக்கும் ஷோலோ பில்டப் பார்க்க சகிக்கல.

தனுஷ் கூடவே படம் நெடுகஎப்போதும் இருக்கும் ரோபோசங்கர், மற்றும் வினோத் வருகிற காட்சிகள் 120 ரூபாய்்் கொடுத்து படம் பார்க்கும் ஆடியன் சுக்குஆறுதல் தருகிிறதுஅவர்கள் செய்யும் கிண்டல் கேலி எள்ளல்கள் சற்றேஅளவாக நம்மைை சிரிக்க வைக்கின்றது.

நாயகியாக சாய்பல்லவி.புதிதாக அவரைப் பார்ப்பவர்களிடம் மலர் டீச்சராக நடித்தது இவர்தான் என்று சொன்னால் சத்தியமாக நம்பமாட்டார்கள்.


அந்தளவு துறுதுறுப்பும் துடிப்புமாக ரெளடி பேபி என்று தனுஷை அவர் கொஞ்சுகிற காட்சிகளில் படம் பார்க்கும் இளசுகளுக்கு பிரஷர் எகிறும்.இன்னும் கொஞ்சநேரம் அவர் திரையில்இருக்கமாட்டாரா? என்று படம் பார்ப்பவர்களை ஏங்க வைக்கிறார்.

தனுஷின் நண்பராக கிருஷ்ணா, வில்லனாக டோவினோதாமஸ், அரசாங்க அதிகாரியாக வரலட்சுமி உள்ளிட்ட நிறையப் பேர் படத்தில் இருக்கிறார்கள்.

படத்தின்முதல்காட்சியிலேயே வில்லனை சக்திவாய்ந்த நபராக காட்டுவதால், ஆகா ஒரு அட்டகாசமான ஆக்‌ஷன் படம் பார்க்கலாம் என்கிற எதிர்பார்புடன் இருக்க்கும் மோது அடுத்த காட்சியிலேயே அதற்கு ஆப்புவைத்துவிடுகிறார் சொதப்பலான திரைக்கதையால் இயக்குனர்.அவனை உடனே கொல்லமாட்டேன் என்று ஏதேதோ பேசி பார்வையாளனைஎரிச்சல் மூட்டுகிறார் வில்லன் டோவினோ.


படத்தின் முதல் பாதியில் ரவுடி பேபி பாடலுக்கு தனுஷ் உடன் இணைந்து சாய் பல்லவி போடும் குத்தாட்டம் தனுஷ்சையே பின்னுக்கு தள்ளுகிறது. ந டிப்பு மட்டுமல்ல, நடனத்திலும் நான் தனுஷ் கு மேல என் பதை சாய் பல்லவி வரும் அனைத்து காட்சியிலும் நிருபித்திருக்கிறார். ஒரு குத்து பாடல வைத்து இடைவேளைவரை நகர்த்திச் சென்றவர்கள்.

அதன்பின் என்ன செய்வதென்று அவர்களுக்கும் தெரியவில்லை என்ன நடக்கிறதென்று படம்் பார்க்கும்நமக்கும் புரியாமல்் முடியை பிய்த்துகொள்கிற நிலை மைக்கு நாம்் தள்ளப்படுறோோம்.

நகமும் சதையுமான நண்பன் அவனே நாயகனைப் புரிந்துகொள்ளாமல் எதிரியாவது போன்ற அரதப்பழசான எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்து சலிப்பூட்டும் காட்சிகள் மட்டுமின்றி வில்லனை அழிக்க எல்லோரும் ஒன்று சேருவது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல இருக்கிறது.

நண்பர்கள் துரோகிகளாகிறார்கள் துரோகிகள் எதிரிகளாகிறார்கள் எல்லாத்தையும் நான் தாங்குவேன், உன்னையும் முதுகுல குத்திட்டாங்களா? என்பது உட்பட தனுஷின் தனிப்பட்ட வாழ்க்கைையில் நிகழ்ந்த சம்பவங்களிின் சுய புலம்பல்கள் படம் நெடுகஅவ்வப்போது வருகிறது.

தனுஷ் திரையில் வந்தாலே போதும் மற்ற எதுவும் தேவையில்லை என்று தனுஷ் மற்றும்இயக்குநர் பாலாஜிமோகன் இருவரும் முடிவு செய்துவிட்டார் போலும்.
ஒரு கட்டத்துக்கு மேல் தாங்க முடியவில்லை.

மாரி படத்துலசெஞ்சிருவேன் செஞ்சிருவேன்னு  சொன்னவருமாரி – 2ல் படம் பார்க்க போற நம்மள நல்லா வச்சு செஞ்சிட்டார் தனுஷ்.

– சினி ராம்