சிறந்த திரைப்படம், நடிகர், இயக்குனர், சண்டை பயிற்சியாளர் என நான்கு `பிலிம் ஃபேர் விருதுகளை டங்கல் இந்தி திரைப்படம் பெற்றுள்ளது.

வருடம்தோறும்  டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தை் சேர்ந்த பிலிம் ஃபேர் சினிமா இதழ், திரைப்பட கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக கடந்த 1954-ம் ஆண்டு முதல் விருதுகளை வழங்கி வருகிறது.

மதிப்பு மிகுந்த திரைப்பட விருதுகளில் ஒன்றாக இந்த விருது கருதப்படுகிறது.  62-வது பிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா, மும்பையில் வழக்கம்போல  மிகுந்த  பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

மல்யுத்தத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘டங்கல்’  இந்தித் திரைப்படத்திற்கு நான்கு விருதுகள் கிடைத்தன.

கடந்த ஆண்டின் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் (அமீர்கான்) சிறந்த இயக்குனர் (நிதிஷ் திவாரி) சிறந்த ஸ்டன்ட் மாஸ்டர் (ஷியாம் கவுஷால்) ஆகிய விருது டங்கல் திரைப்படத்துக்கு கிடைத்தது.

பலரும் எதிர்பார்த்த  ‘உட்தா பஞ்சாப்’ படத்தில் நடித்த ஆலியா பட்டுக்கு வழங்கப்பட்டது. இதே படத்தில் நடித்த தில்ஜித் டோசஞ்சுக்கு சிறந்த அறிமுக நடிகர் விருது கிடைத்தது.